திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. குடவாசலிலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்து இத்தலம் வழியே செல்கிறது.
காசிக்குச் சமமாகக் சொல்லப்படும் ஆறு தலங்களுள் ஒன்று. திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, திருச்சாய்க்காடு ஆகியவை மற்ற ஐந்து தலங்கள். திருமகள் திருமாலை அடைய விரும்பி சிவபூசை செய்து விருப்பம் நிறைவேறப் பெற்றமையால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது சிறப்பு. எமன் உலக உயிர்களைக் கொல்லும் பாவத்தைப் நீக்குவதற்காக இத்தலத்து இறைவனை வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் பேறு பெற்றhன். எமனுக்குத் தனி சன்னதி உள்ளது.
இத்தலத்தில் சிவபெருமான் திருவாஞ்சிநாதர் எனவும், இறைவி மங்களநாயகி எனவும் வணங்கப்படுகின்றனர். ஆறுமுகப்பெருமான் இத்தலத்தில் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில்மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.
இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம், தில (எள்) ஹோமம் ஏதேனும் செய்து நெய்தீபம் ஏற்றி அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும்.
தொடர்புக்கு: 04366-228305
|